பணிக்கு சென்ற நர்ஸ் மாயம்
புதுக்கோட்டை மாவட்டம், சரையான்பட்டியை சேர்ந்த நர்ஸ் மாயமான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Update: 2024-06-16 06:52 GMT
திருமயம் அருகே சரையான்பட்டியை சேர்ந்தவர் மோகன். விவசாயி. இவரது மகள். பிரதீபா(24). மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனையில் நர்ஸ் ஆக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் பணிக்குச் செல்வதாக கூறிச்சென்ற பிரதீபா வீடு திரும்ப வில்லை.
அவரது பெற்றோர் பல இடங்களில் தேடியும் காணவில்லை.இது குறித்து அவர்கள் அளித்த புகாரின்பேரில் திருமயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.