நர்சிங் கல்லூரி மாணவி மாயம்
பளுகல் அருகே நர்சிங் கல்லூரி மாணவி மாயமான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
Update: 2024-05-24 16:43 GMT
மாணவி மாயம்
கன்னியாகுமரி மாவட்டம் ,பளுகல் கண்ணமாமுடு பகுதியை சேர்ந்தவர் ஆஷிகா.இவர் அந்த பகுதியில் உள்ள நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார். வீட்டில் இருந்த ஆஷிகா நேற்று திடீரென மாயமானார்.
இதையடுத்து அவரது பெற்றோர் அவரை பல்வேறு இடங்களில் தேடினார்கள். எங்கு தேடியும் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது தாயார் லீனா பளுகல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான ஆஷிகாவை தேடி வருகின்றனர்.