விழுப்புரத்தில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு பேரணி
விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின்கீழ், ‘ஊட்டச்சத்து விழிப்புணர்வு இருவார நிகழ்வு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சியர் பழனி துவக்கி வைத்தார்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின்கீழ், ‘ஊட்டச்சத்து விழிப்புணர்வு இருவார நிகழ்வு” (poshan Pakhwada -2024) நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சியர் பழனி துவக்கி வைத்தார்.
தேசிய ஊட்டச்சத்து விழிப்புணர்வு இரு வார நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஊட்டச்சத்து இருவார நிகழ்வு கொண்டாடப்படுவதின் நோக்கம் வளரிளம் பெண்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகும். ஊட்டச்சத்து என்பது உடலுக்கு தேவையான சத்துக்களை உணவாக சரிவிகிதத்தில் எடுத்துக்கொள்ளுதல். இதில் குழந்தையின் முதல் 1000 நாட்கள், இரத்தசோகை, முறையாக கை கழுவுதல், சுகாதார மற்றும் ஊட்டச்சத்து உணவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
அதனடிப்படையில்இன்றைய தினம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின்கீழ்ரூபவ் ‘ஊட்டச்சத்து இருவாரநிகழ்வு குறித்த கண்காட்சி அரங்கு குத்துவிளக்கேற்றி திறந்து வைக்கப்பட்டு, கண்காட்சி அரங்கு பார்வையிடப்பட்டது. மேலும் ‘ஊட்டச்சத்து இருவார நிகழ்வு குறித்த விழிப்புணர்வு போஸ்டர் வெளியிடப்பட்டதுடன், கையெழுத்து இயக்கத்தினை கையெழுத்திட்டு தொடங்கி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ‘ஊட்டச்சத்து இருவார விழிப்புணர்வு நிகழ்வு குறித்த விழிப்புணர்வு பேரணி துவக்கி வைக்கப்பட்டது.
இப்பேரணியில்ரூபவ் 250-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் கலந்துகொண்டு ஊட்டச்சத்து குறித்து விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். இப்பேரணியானது மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தொடங்கி நான்குமுனை சந்திப்பு வரை சென்று நிறைவடைந்தது மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின்கீழ் ஊட்டச்சத்து விழிப்புணர்வு இருவார நிகழ்வு குறித்த உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் பழனி தலைமையில் அனைத்துத்துறை அலுலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) சரஸ்வதி,ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் (பொ) ராஜலட்சமி, குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர்கள் மனோசித்ரா, கவிதா, டயானா, ஜெகதீஸ்வரி, செல்வி, சௌமியா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயலட்சுமி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.