நல்லூரில் ஊட்டச்சத்து உணவு திருவிழா

Update: 2023-11-10 04:15 GMT

ஊட்டச்சத்து உணவு திருவிழா

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த நல்லூர் வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்தில் வட்டார அளவிலான ஊட்டச்சத்து உணவு திருவிழா ஒன்றிய பெருந்தலைவர் செல்வி தலைமையில் நடைபெற்றது. இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயக்குமாரி, சண்முக சிகாமணி (கிஊ), குழந்தைகள் ஊட்டச்சத்து மைய மேலாளர் நாகயோஜனவல்லி, ஆகியோர் கலந்து கொண்டு முதல் மூன்று இடத்தை பிடித்த ஊராட்சிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கி வாழ்த்தினார். இந்நிகழ்வில் வட்டார இயக்க மேலாளர், வட்டார ஒருங்கிணைப்பாளர் செல்வி, மகளிர் சுய உதவி குழு பிரதிநிதிகள், வட்டார இயக்க மேலாண்மை அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News