பள்ளியை ஆக்கிரமித்த கருவேல் மரங்கள் - அகற்ற கோரிக்கை

பள்ளியை ஆக்கிரமித்த கருவேல் மரங்களை அகற்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது

Update: 2023-12-08 09:33 GMT

பள்ளி வளாகத்தில் மேயும் கால்நடைகள்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

காளையார்கோவிலில் இருபாலர் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்படுகிறது. இங்கு 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். தற்போது இந்த பள்ளி வளாகத்தில் செடி, கொடிகள் வளர்ந்து விஷ பூச்சிகள் உலாவரும் இடமாக பராமரிப்பு இன்றி காணப்படுகிறது. முக்கியமாக பள்ளி வளாகத்தை சுற்றிலும் சுற்றுச் சுவர் இல்லாததால் கால்நடைகள் வெறி நாய்கள் பள்ளி வளாகத்தில் சுற்றி திரிவதால் மாணவர்கள் அச்சத்துடன் கல்வி பயின்று வருகின்றனர்.

மேலும் பள்ளி வளாகத்தை சுற்றிலும் ஏராளமான குடியிருப்புகள் கடைகள் இருப்பதால் அப்பகுதியில் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் சுற்றுச்சுவர் இல்லாததால் பள்ளி வளாகத்துக்குள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.

ஆகவே பள்ளி கல்வி துறையும், மாவட்ட நிர்வாகம் உடனடியாக சுற்றுச்சுவர் அமைத்து பள்ளி வளாகத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags:    

Similar News