புனித வாரம் கடைபிடிப்பு - குருத்தோலை பவனில் ஈடுபட்ட கிறிஸ்தவர்கள்
ஆறுகாணி திரு குடும்ப ஆலயத்தில் நடைபெற்ற குருத்தோலை பவனியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு.
Update: 2024-03-24 07:46 GMT
இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு பெருவிழா கிறிஸ்தவர்களால் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. ஈஸ்டருக்கு முந்தைய ஒரு வாரம் புனித வாரமாக கடைபிடிக்கப்படும். புனித வாரத்துக்கு முந்தைய 40 நாட்கள் கிறிஸ்தவர்களின் தவக்காலமாகும். இந்த தவ காலத்தில் நோன்பு இருந்து, ஏழைகளுக்கு உதவிகள் செய்வார்கள். இயேசு கிறிஸ்து மனிதர் களை பாவங்களில் இருந்து மீட்பதற்காக சிலுவை பாடுகளை அனுபவித்து சிலுவையில் அறையுண்டு இறந்தார். அதை நினைவு கூறும் வகையில் 40 நாட் கள் தவக்காலம் கடைபிடிக்கப்படுகிறது.அதன்படி இந்த ஆண்டுக்கான ஈஸ்டர் பண்டிகை மார்ச் மாதம் 31ம் தேதி வருகிறது. இதை யொட்டி 40 நாட்கள் தவக்காலம் கடந்த பிப்ர வரி 14ம்தேதி சாம்பல் புதனுடன் தொடங்கியது. இதையொட்டி தேவால யங்களில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது..தவகாலத்தின் முக்கிய நிகழ்வான குருத்தோலை பவனி இன்று நடைபெற்றது.தேவாலயங்களில் சிறப்பு ஆராதனை நடக்கிறது. ஈஸ்டருக்கான புனித வாரமும் தொடங்குகிறது. புனித வாரத்தின் தொடக்க நிகழ்ச்சியாகவே குருத்தோலை பவனி நடைபெற்றது இதன் ஒரு பகுதியாக ஆறுகாணிப்பகுதியில் உள்ள திருகுடும்ப ஆலயத்தில் கிறிஸ்தவர்கள் இன்று குருத்தோலை பவனியையொட்டி ஓசன்னா பாடல்கள் பாடி ஊர்வலமாக சென்று சிறப்பு வழி பாடு, திருப்பலிகள் ஆகியவற்றில் பங்கேற்றனர்.