நீத்தார்நினைவு தினம் அனுசரிப்பு
கமுதி தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் நீத்தார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி தீயணைப்பு நிலைய அலுவலக வளாகத்தில் நீத்தார் நினைவு தினம் அனுசரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
கமுதி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் நேற்று நீத்தார் நினைவு தினம் அனுசரிப்பு நிகழ்ச்சி நிலைய வளாகத்தில் நிலைய அலுவலர் சந்திர சேகரன் மற்றும் போக்குவரத்து நிலை அலுவலர் நாகநாதன் ஆகியோர் தலைமையில், முன்னணி தீயணைப்பு வீரர்கள் பழனி, உத்தண்டசாமி ஆகியோர் முன்னிலையில் நடை பெற்றது.தீயணைப்பு வீரர்கள் சார்பில் வருடா வருடம் நடைபெற்று வருகிறது.
கடந்த 1944 - ம் வருடம் இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற போது மும்பை துறைமுகத்தில் நிறுத்தப் பட்டிருந்த வெடி மருந்து ஏற்றிய கப்பல் ஒன்று திடீரென்று தீப்பற்றி எரிந்தது. அப்போது தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று கப்பல் வெடித்து தீயணைப்புத்துறை வீரர்கள் 66 பேர் தன்னுயிரை நீத்தனர். அதை நினைவு கூறும் பொருட்டு இந்தியா முழுவதும் ஏப்ரல் 14 -ம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை நீத்தார் நினைவு தினம் அனுசரிக்கப் படுகிறது.
தமிழ்நாட்டில் இதுவரை 33 வீரர்கள் தங்கள் இன்னுயிரை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட்டிருக்கும் போது வீரமரணம் அடைந்துள்ளனர். அதனை நினைவு கூறும் பொருட்டு கமுதி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத் தில் நினைவுத் தூண் அமைத்து மலர் வளையம் வைத்து மலர்கள் தூவி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் ஏராளமான தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டனர்.