அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் பூஜ்ஜிய நிழல் தினம் கடைப்பிடிப்பு

தமிழ்நாடு அறிவியல் இயக்க வக்பு வாரிய கிளை மற்றும் விலங்கியல் துறை சார்பாக பூஜ்ஜிய நிழல் தினமானது (நிழல் இல்லா தினம்) அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது

Update: 2024-04-16 05:07 GMT

மதுரை, வக்பு வாரியக் கல்லூரியில், தமிழ்நாடு அறிவியல் இயக்க வக்பு வாரிய கிளை மற்றும் விலங்கியல் துறை சார்பாக பூஜ்ஜிய நிழல் தினமானது (நிழல் இல்லா தினம்) கல்லூரி வளாகத்தில் கடைபிடிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கல்லூரியின் முதல்வர் (பொறுப்பு) முனைவர். S.A.N. ஷாசுலி இப்ராஹிம்,M. ராஜேஷ், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தலைவர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை மற்றும் முனைவர். M. மும்தாஜ், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தலைவர், வக்பு வாரியக் கல்லூரி, மதுரை ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள். இந்நிகழ்வில் M. ராஜேஷ், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தலைவர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை பூஜ்ஜிய நிழல் தினம் குறித்தும், பூஜ்ஜிய நிழல் தினம் எப்போது, எப்படி நிகழும் என்பது குறித்தும் மாணவர்களிடையே விளக்கினார்.

மேலும் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மதியம் 12.17 மணிக்கு வானியலில் நடந்த நிகழ்வை பேனா, தண்ணீர் பாட்டில், பந்து, முக்காலி போன்ற பொருள்களை வைத்து நிழல் மறையும் வரை காத்திருந்து. நிழல்கள் நொடிக்கு நொடி குறைவதையும் குறிப்பிட்ட நேரத்தில் முற்றிலும் மறைந்து பூஜ்ஜிய நிழல் விழுவதை மாணவர்களுக்கு செயல்விளக்கப்படுத்திக்காட்டினார். இந்நிகழ்ச்சியில் அறிவியல் துறைகளை ச்சார்ந்த பேராசிரியர்கள், பேராசிரியைகள் மற்றும் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றார்கள்.

Tags:    

Similar News