ஒத்தாண்டேஸ்வரர் கோயில் பங்குனி உத்திர திருவிழா !
ஒத்தாண்டேஸ்வரர் கோயிலில் 15ம் தேதி பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது.;
By : King 24x7 Angel
Update: 2024-03-12 09:18 GMT
ஒத்தாண்டேஸ்வரர் கோயில்
பூந்தமல்லி அடுத்த திருமழிசையில் அமைந்துள்ளது குளிர்ந்த நாயகி உடனுறை ஒத்தாண்டேஸ்வரர் கோவில். இந்த கோவிலில் வரும் 15ம் தேதி பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது. முன்னதாக 14ம் தேதி விநாயகர் உற்சவம் நடைபெறுகிறது. பங்குனி உத்திர திருவிழாவில் தினமும் காலை, மாலையில் பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 21ம் தேதி காலை 7.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் நடைபெறும். பிறகு மாலை 5 மணிக்கு வசந்த மண்டபம் எழுந்தருதலும், இரவு 8 மணிக்கு மேல் வசந்த மண்டபத்திலிருந்து கோவிலுக்குள் எழுந்தருதலும் நடைபெறுகிறது. மேலும் 24ம் தேதி காலை நடராஜர் தரிசனமும், மாலை திருக்கல்யாணமும், இரவு பஞ்சமூர்த்திகள் உற்சவமும் நடைபெறுகிறது. அதன்படி 14ம் தேதி மாலை விநாயகர் உற்சவமும், முஷிக வாகனத்திலும், 15ம் தேதி காலை கொடியேற்றமும், தொட்டி உற்சவமும், மாலை சிறிய மங்களகிரி வாகனத்திலும், 16ம் தேதி காலை சூரிய விருத்தமும், மாலை சந்திர விருத்தம் வாகனத்திலும், 17ம் தேதி காலை மங்களகிரி நிகழ்ச்சியும், மாலை சிம்ம வாகனத்திலும், 18ம் தேதி காலை சிவிகை நிகழ்ச்சியும், மாலை நாக வாகனத்திலும், 19ம் தேதி காலை ஸ்ரீ அதிகார நந்தி சேவையும், மாலை ரிஷப வாகன சேவையும், 20ம் தேதி காலை தொட்டி உற்சவமும், மாலை யானை வாகனத்திலும், 21ம் தேதி காலை தேரோட்டமும், மாலை வசந்தமண்டபம் எழுந்தருளல் நிகழ்ச்சியும், இரவு திருக்கோவிலுக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 22ம் தேதி மாலை ஊணாங்கொடி சேவையும், இரவு குதிரை வாகனத்திலும், 23ம் தேதி காலை சிவிகை உற்சவமும் மாலை ஸ்ரீபிக்ஷாடனார் சவுடல் விமான உற்சவமும், 24ம் தேதி காலை ஸ்ரீ நடராஜர் தரிசனமும், பகல் தீர்த்தம் தொட்டி உற்சவமும், மாலை திருக்கல்யாணமும் இரவு பஞ்சமூர்த்திகள் உற்சவமும் இரவு அவரோகணப்பல்லக்கு சேவையும், ஸ்ரீ சண்டேஸ்வரர் உற்சவமும் நடைபெறுகிறது. மேலும் 25ம் தேதி இரவு தெப்ப உற்சவமும் ஸ்ரீபஞ்சமூர்த்தி எழுந்தருளல் நிகழ்ச்சியும், 26ம் தேதி காலை ஸ்ரீ உமா மகேஸ்வரர் தரிசனமும், இரவு தெப்ப உற்சவமும், ஸ்ரீசந்திரசேகரர் எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 27ம் தேதி இரவு தெப்ப உற்சவம் மற்றும் ஸ்ரீ சுப்பிரமணியர் எழுந்தருளல் நிகழ்ச்சியும், 28ம் தேதி இரவு ஸ்ரீ பஞ்சமூர்த்திகள் ஆஸ்தானப்பிரவேசம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 29ம் தேதி பங்குனி உத்திர திருவிழாவுடன் நிறைவுபெறுகிறது.