இந்து அறநிலையத் துறையின் கல்லூரியில் அலுவலக ஊழியர்கள் போராட்டம்.
தற்காலிக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கன்னியாகுமரி மாவட்ட இணைக்கப்பட்ட மற்றும் இணைக்கப்படாத திருக்கோயில்கள் நிர்வாகத்தின் கீழ் குழித்துறையில் தேவி குமாரி மகளிர் கல்லூரி 1965 ம் ஆண்டு முதல் செயல் பட்டு வருகிறது . இங்கு 1400 மாணவிகளும் 100 பேராசிரியர்களும் பணியாற்றி வருகின்றனர். இங்கு 28 அலுவலக ஊழியர்கள் மற்றும் உதவியாளர், ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் உள்ளது. இதில் 24 பணியிடங்கள் கடந்த 14 ஆண்டுகளாக காலியாக உள்ளது. மேலும் 3 பேர் ஒரு ஆண்டுக்குள் ஓய்வு பெற உள்ளனர். ஆனால் 6 தற்காலிக ஊழியர்கள் குறைந்த சம்பளத்தில் கடந்த 14 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். மாணவிகளின் கழிப்பிடங்களை கழுவுவதும் இவர்களே செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் தற்பொழுது புதிய பணியிடங்களை நிரப்புவதற்காக இந்து சமய அறநிலை துறை விளம்பரம் பிரசுரிக்கப்பட்டுள்ளது. பணியாற்றும் 6 ஊழியர்களை கண்டு கொள்ளவில்லை. இதனால் குறைந்த சம்பளத்தில் பணியாற்றும் சதீஷ்குமார், ராஜேஷ், சுஜாதா, ப்ரியா, அம்பிளி, ஜெலஜா குமாரி ஆகிய 6 பேர்கள் நேற்று காலை முதல் கல்லூரியில் முதல்வர் அறை முன் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு ஒரு முடிவு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என போராட்டகாரர்கள் கூறினர்.