வேதகிரீஸ்வரர் கோவிலில் குறுகிய காலம் மட்டும் பணிபுரியும் அலுவலர்கள்
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் பல்வேறு காரணங்களால் செயல் அலுவலர்கள் குறுகிய காலம் மட்டுமே பணிபுரிந்து இடமாறுதல் வாங்கி செல்கின்றனர்.
இந்து சமய அறநிலையத்துறையின் கீழ், திருக்கழுக்குன்றத்தில் வேதகிரீஸ்வரர் கோவில் பிரசித்திபெற்றது. அதன் செயல் அலுவலராக நியமிக்கப்படுவோர், குறுகிய காலமே பணியாற்றி விட்டு, வேறிடத்திற்கு மாறுதல் கேட்டு சென்று விடுகின்றனர்.
கடந்த 2022-ல், வேணுகோபால் என்பவர், நான்கே மாதங்கள் மட்டுமே பணிபுரிந்து, பின் வேறிடம் மாறினார். அப்போது, மாமல்லபுரம் ஆளவந்தார் அறக்கட்டளை செயல் அலுவலர், இங்கு கூடுதல் பொறுப்பு வகித்தார். கடந்த ஆண்டு, பிரியா என்பவர் நியமிக்கப்பட்டார். அவர் ஜூலை முதல் பணியாற்றினார்.
சில நாட்களுக்கு முன், வேறு இடத்திற்கு வேறிடத்திற்கு மாற்றலானார். தற்போது, கும்பகோணம் பகுதி ஆய்வாளர் புவியரசு, இரண்டு மாதங்களுக்கு முன், இக்கோவில்செயல் அலுவலராகநியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுள்ளார். கோவில் நிர்வாகத்தில் உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் தலையீடு, சொத்துக்களை நிர்வகித்து பராமரிக்கும் சிக்கல் உள்ளிட்ட காரணங்களால், இங்கு பணிபுரிவதில் தயக்கம் இருப்பதாகவும், அதனாலேயே சில மாதங்களில் அலுவலர்கள், வேறிடம் மாறுதல் கேட்டு சென்று விடுவதாக பக்தர்கள் கருதுகின்றனர்.