குடியிருப்புகளை காலி செய்ய வற்புறுத்தும் அதிகாரிகள் - மக்கள் புகார்

மானாமதுரை அருகே ஆதிதிராவிட நலத்துறையால் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டு குடியிருக்கும் மக்களை அதிகாரிகள் காலி செய்த வற்புறுத்துவதாக புகார் எழுந்துள்ளது.

Update: 2024-01-04 04:40 GMT

புகார் தெரிவித்த கிராம மக்கள் 

மானாமதுரை அருகே இடைக்காட்டூர் புது காலனி பகுதியில் கடந்த 1995ம் ஆண்டு ஆதி திராவிடர் வகுப்பைச் சேர்ந்த சுமார் 130 பேருக்கு சிவகங்கை மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் வீட்டுமனை பட்டா வழங்கியுள்ளது. இதையடுத்து 20க்கும் மேற்பட்டோர் வீடுகளை கட்டி கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக குடும்பத்தினருடன் அங்கு வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அப்பகுதியில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் குடியிருப்பவர்களை ஆதிதிராவிட நலத்துறை அதிகாரிகள், அந்த இடம் தனியாருக்கு சொந்தமான இடம் என்று கூறி வீடுகளை விட்டு காலி செய்ய வற்புறுத்தி வருவதாக புகார் தெரிவித்து வருகின்றனர்.
Tags:    

Similar News