ரூ.89 லட்சத்தில் கட்டப்படும் முடி காணிக்கை மண்டபம் அதிகாரிகள் ஆய்வு
வெட்டுவானம் எல்லையம்மன் கோயிலில் ரூ.89 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய முடி காணிக்கை மண்டப கட்டிட பணிகளை அறநிலையத்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவானம் அருள்மிகு எல்லையம்மன் கோயில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இங்கு ஆண்டுதோறும் ஆடி மாதம் பிரம்மோற்சவம், தேர்த்திருவிழா,தெப்பல் உற்சவம் , லட்சதீபம், ஊஞ்சல் உற்சவம் என பல்வேறு விழாக்கள் நடைபெறுகிறது.
இவ்விழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு எல்லையம்மனை தரிசனம் செய்து தனது பிரார்த்தனைகளை நிறைவேற்ற முடி காணிக்கையும் செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்து சமய அறநிலைய துறை சார்பில் ரூ.89 லட்சம் மதிப்பீட்டுல் பக்தர்களுக்கு குளியல் அறையுடன் கூடிய புதிய முடி காணிக்கை மண்டபம் கட்டிட பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.இதனை தலைமையிடத்து கண்காணிப்பு பொறியாளர் செல்வராஜ் திடிரென நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.