கெட்டுப்போன கேக் விற்பனை - பறிமுதலோடு நிறுத்திய அதிகாரிகள்

Update: 2023-11-02 03:03 GMT

பாசி படர்ந்த கேக் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கோத்தகிரி நகரில் ஏராளமான பேக்கரிகள் உள்ளன . நாள்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அங்குள்ள பேக்கரிகளில் திண்பண்டங்களை வாங்கி செல்கின்றனர். இந்த நிலையில் சில்பா என்ற பேக்கரியில் வெஸ்ட்புரூக் பகுதியை சேர்ந்த பெண்மணி தனது குழந்தைகளுக்காக கேக் வாங்கியுள்ளார். வீட்டிற்கு சென்றவுடன் கேக்கை குழந்தைகளுக்கு கொடுத்துள்ளார். அதை சாப்பிட்ட குழந்தைகள் கேக்கை சுவைத்த போது கசப்பு ஏற்ப்பட்டுள்ளது. உடனே தாய் அந்த கேக்கை எடுத்து பார்த்தபோது கேக்கின் அடியில் பாசி படிந்ததும் கெட்டுப்போன வாசனையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மேலும் கெட்டு போன கேக் விற்பனை செய்யப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் அந்த பேக்கரில் உணவு துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பேக்கரியில் விற்பனைக்கு வைக்கப்படிருந்த அனைத்து கேக்குகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர் . கெட்டுப்போன கேக் விற்பனை செய்த பேக்கரிக்கு அதிகாரிகள் சீல் வைப்பார்கள் என பொதுமக்கள் எதிர்பார்த்த நிலையில் கேக்குகளை மட்டும் பறிமுதல் செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News