காங்கேயத்தில் நெடுஞ்சாலை பணி குறித்து அதிகாரிகள் ஆய்வு

காங்கேயம் தேசிய நெடுஞ்சாலையில் தொடர் விபத்துக்கள் நடைபெறுவது குறித்து தேசிய நெடுஞ்சாலை பணிகளை அதிகாரிகள் ஆய்வு நடைபெற்றது.

Update: 2024-05-23 00:54 GMT

காங்கேயம் தேசிய நெடுஞ்சாலையில் தொடர் விபத்துக்கள் நடைபெறுவது குறித்து தேசிய நெடுஞ்சாலை பணிகளை அதிகாரிகள் ஆய்வு நடைபெற்றது.


கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடந்த பல மாதங்களாக சாலை விரிவாக்கப்பணி நெடுஞ்சாலை துறை சார்பில் நடைபெற்று வருகிறது‌. இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தில் ஊராட்சி சாலை அல்லது ஊராட்சி ஒன்றிய சாலைகளை இதர மாவட்ட சாலைகளாக தரம் உயர்த்தும் திட்டத்தின் கீழ் காதபுள்ளப்பட்டி முதல் கண்ணாங்கோவில் சாலை வரை சுமார் 3.16 கிலோ மீட்டர் தொலைவிற்கு இதர மாவட்ட சாலையாக தரம் உயர்த்தும் பணி சுமார் ரூ. 2.79 கோடி மதிப்பீட்டிலும், முதலிபாளையம்- ஆரத்தொழுவு சாலை 2.65 கிலோமீட்டர் தொலைவிற்கு மேம்பாடு செய்யும் பணி ரூ. 2.44 கோடி மதிப்பீட்டிலும் இதர மாவட்ட சாலையாக தரம் உயர்த்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த ஆய்வில் கோவை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு வட்ட கண்காணிப்பு பொறியாளர் ரமேஷ் தலைமையில், கோட்ட பொறியாளர் பிரசன்ன வெங்கடேசன் முன்னிலையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.‌மேலும் இந்த ஆய்வில் ஈரோடு நபார்டு மட்டும் கிராம சாலைகள் கோட்டப் பொறியாளர் முருகேசன், கோவை நபார்டு மற்றும் கிராம சாலைகள் கோட்டப் பொறியாளர் விஸ்வநாதன், திருப்பூர் தரகட்டுப்பாடு கோட்டப் பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி, உள் தணிக்கை பொறியாளர்கள், உதவிக்கோட்டப் பொறியாளர்கள் மற்றும் உதவி பொறியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு ஆய்வினை மேற்கொண்டனர்.
Tags:    

Similar News