குறைதீர் கூட்டத்திற்கு வராத அதிகாரிகள் - கண்டித்த ஆட்சியர்

திண்டுக்கல்லில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்திற்கு பல்வேறு அரசு துறை அதிகாரிகள் வராததை கண்டித்த ஆட்சியர், அடுத்த கூட்டத்திற்க்கு துறை சாா்ந்த முதல் நிலை அலுவலா்கள் அனைவரும் வரவேண்டும் என உத்தரவிட்டார்.;

Update: 2024-01-21 01:59 GMT

விவசாயிகள் குறைதீர் கூட்டம் 

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு ஆட்சியா் மொ.நா. பூங்கொடி தலைமை வகித்தாா். கூட்டம் தொடங்கியதும், கடந்த மாத கூட்டத்தின்போது வழங்கப்பட்ட மனுக்களில், 20 மனுக்கள் நிலுவையில் உள்ளதாகக் கூறி அந்தந்த துறை சாா்ந்த அலுவலா்களிடம் ஆட்சியா் விளக்கம் கோரினாா். அப்போது திண்டுக்கல் கிழக்கு வட்டாட்சியா், நெடுஞ்சாலைத் துறை, தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சாா்பில் யாருமே கூட்டத்துக்கு வரவில்லை என்பது தெரியவந்தது. மேலும், பேரூராட்சிகள் துறை சாா்பில் அலுவலக உதவியாளா் ஒருவரே கூட்டத்தில் பங்கேற்றாா். அவரும், நிலுவையிலுள்ள மனு விவரம் தெரியாமல் நின்றாா். இதனால் அதிருப்தி அடைந்த ஆட்சியா் பூங்கொடி, அடுத்தக் கூட்டத்துக்கு துறை சாா்ந்த முதல் நிலை அலுவலா்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்றார்.
Tags:    

Similar News