பஞ்சமி நிலத்திற்கு பட்டா வழங்க மறுப்பதாக மூதாட்டி புகார்

வீரபாண்டியில் பட்டியலினத்தைச் சேர்ந்த மூதாட்டிக்கு வழங்கப்பட்ட பஞ்சமி நிலத்திற்கு, பட்டா வழங்க மாவட்ட வருவாய் அலுவலர் மறுப்பதாக புகார் எழுந்துள்ளது.

Update: 2024-01-11 06:39 GMT

தேனி மாவட்டம் தேனி தாலுகாவிற்கு உட்பட்ட வீரபாண்டி கிராம பகுதியில் குடியிருந்து வருபவர் குருவம்மாள் என்ற மூதாட்டி இவரது கணவர் பொன்னையா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் அவரது வாரிசுகளுடன் சாலை ஓரத்தில் குடிசை அமைத்து குடியிருந்து வருகிறார் மூதாட்டியின் கணவரான பொன்னையா என்பவர் உயிருடன் இருந்து போது பட்டியலினத்தைச் சேர்ந்த நிலமற்ற ஏழை எளிய மக்களுக்காக அரசு நிலங்கள் வழங்கியது.

 அப்போது பொன்னையா மூதாட்டிக்கு வழங்கபட்ட இரண்டு ஏக்கர் 93 சென்டுள்ள நிலத்தில் பொன்னையா மற்றும் அவரது மனைவி குருவம்மாள் ஆகியோர்கள் விவசாயம் செய்து வந்த நிலத்திற்கு அவர்களது பெயரில் தங்களுக்கு உரிய பஞ்சமி நிலத்திற்கு ஆவணங்கள் அடிப்படையில் பட்டா வழங்கிட வேண்டி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை மனு அளித்தும் இன்று வரை பட்டா வழங்கிட பரிசீலனை செய்யப்படாமல் அலைகழிக்கப்பட்டுள்ளனர்.

  மேலும் பட்டியலின சமுதாய மக்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தில் மாற்று சமுதாயத்தை சேர்ந்த சிலர் அவர்களின் சுய ஆதாயத்திற்காக நிலங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும் அவ்வாறு பஞ்சமி நிலங்களை ஆக்கிரமித்துள்ள ஆக்கிரமிப்பாளர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட வீடு அற்ற நிலையில் தெருவோரத்தில் குடியிருந்து வரும் வயதான மூதாட்டிக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் நில உரிமை பட்டா வழங்கிட பரிசீலனை மேற்கொண்டு உதவிடுமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு பாதிக்கப்பட்ட மூதாட்டி கோரிக்கை

Tags:    

Similar News