இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து மூதாட்டி பலி
நாகை மாவட்டம் செருதூர் பிள்ளையார் கோவில் அருகே இருசக்கர வாகனம் தடுப்பு வேலியில் மோதியதில் தவறி விழுந்த மூதாட்டி பலியானார்.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி பாமணி பள்ளிவாசல் தெரு பகுதியை சேர்ந்தவர் அப்துல்லா மனைவி ஜெனிதா பேகம் வயது 60 இவர் தனது உறவினரான முகமது ஜமீலுடன் பிப்ரவரி 29 திங்கட்கிழமை காலை 8:30 மணிக்கு நாகை மாவட்டம் கீழையூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட செருதூர் பிள்ளையார் கோவில் பகுதியில் சென்று கொண்டிருந்தார் அப்போது எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் தடுப்பு வேலியின் மீது மோதியதில் தலையில் பலத்த காயமடைந்த ஜெனிதா பேகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இரு சக்கர வாகனத்தை ஒட்டி சென்ற முகமது ஜமீல் இடது காலில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் இது தொடர்பாக ஜெனிதா பேகம் சகோதரர் முகமது இக்பால் கீழையூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.