சட்டவிரோத மதுவிற்பனை – முதியவர் கைது

வெள்ளியணை டாஸ்மாக் கடை அருகே சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட முதியவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Update: 2024-01-29 06:16 GMT

சட்டவிரோத மது விற்பனை

கரூர் மாவட்டம், வெள்ளியணை பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பதாக மதுவிலக்கு அமலாக்க பிரிவு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் முத்துசாமிக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் ஜனவரி 27ஆம் தேதி மதியம் 3 மணி அளவில், வெள்ளியணை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, வெள்ளியணை தெற்கு பகுதியில் செயல்படும் டாஸ்மாக் கடை அருகே, சட்ட விரோதமாக மது விற்பனை நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சட்டவிரோத விற்பனையில் ஈடுபட்ட, வெள்ளியணை தேவேந்திர நகர், வடக்கு தெருவை சேர்ந்த சோழப்பன் வயது 67 என்பவரை கைது செய்து, அவர் விற்பனைக்கு வைத்திருந்த 8 குவாட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், பின்னர் அவரை காவல் நிலையப் பிணையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் வெள்ளியணை காவல்துறையினர்.

Tags:    

Similar News