நாகர்கோவில் அருகே முதியவர் அடித்துக் கொலை??

நாகர்கோவில் அருகே உடலில் தாக்கியதற்காக ரத்த காயங்களுடன் இருந்த முதியவரின் சடலத்தை கைப்பற்றிய போலீசார் சந்தேகத்தின் பேரில் ஒருவரை தேடி வருகின்றனர்.;

Update: 2024-04-23 07:42 GMT

வைகுண்டமணி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பழவிளை பகுதியை சேர்ந்தவர் வைகுண்டமணி (61).  கூலி தொழிலாளி. வைகுண்ட மணி தினமும் காலை வேளைகளில் அந்த பகுதியில் உள்ள தென்னந் தோப்புகளில் சென்று ஒலைகளை எடுத்து வருவது வழக்கம்.   வழக்கம் போல் நேற்று காலை வைகுண்டமணி ஓலை எடுக்க சென்றவர் பின் வீடு திரும்பவில்லை. அவரை தேடி அவரது தம்பி வைகுண்டதாஸ் சென்றபோது, தம்மத்து கோணம் பகுதியில் உள்ள பாஸ்கர் என்பவருக்கு சொந்தமான தோப்பில் தலை மற்றும் முகம் பகுதிகளில் பலத்த ரத்த காயத்துடன் வைகுண்டமணி இறந்து கிடந்தார்.      

Advertisement

 இது குறித்து ராஜாக்கமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. அது சிறிது நேரம் ஓடி சென்று நின்றது.        மேலும் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் வைகுண்ட மணி அடிக்கடி பாஸ்கரின் தோட்டத்தில் சென்று தென்னை ஓலைகளை பொறுக்குவதாகவும், அதனை பாஸ்கர் கண்டித்ததாகவும் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் நேற்று வைகுண்டமணி பாஸ்கரின் தோட்டத்தில் தென்னை ஓலை எடுக்க வந்திருக்கலாம் என்றும், இதில் தகராறு ஏற்பட்டு  அடித்ததில் வைகுண்டமணி இறந்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் தலைமறைவாகியுள்ள பாஸ்கரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News