வேலூரில் மயங்கி விழுந்து ஒருவர் பலி!

சாலையோரம் மயங்கி விழுந்து இறந்து கிடந்த முதியவரின் உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-04-22 15:04 GMT

முதியவர் மரணம் 

வேலூர் விரிஞ்சிபுரம் பெரிய தெரு பகுதியில் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சாலையோரமாக மயங்கி விழுந்து இறந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த விரிஞ்சிபுரம் கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வந்து உடலை மீட்டு வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் அந்தப் பகுதியில் பிச்சை எடுத்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News