தாமிரபரணி ஆற்றில் மூழ்கி முதியவர் பலி!
முறப்பநாடு அருகே தாமிரபரணி ஆற்றி குளித்தபோது நீரில் மூழ்கி முதியவர் பரிதாபமாக இறந்தார். ;
Update: 2024-03-25 01:31 GMT
பலி
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகில் உள்ள பக்கப்பட்டி கிராமம் அம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் தங்கராஜ் இவரது மனைவி நல்லம்மாள் (70). இவர் நேற்று தாமிரபரணி ஆற்றில் குளிப்பதற்காக சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்குசென்று விட்டதால் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து முறப்பநாடு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வனிதா ராணி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.