டூவீலர் மீது கார் மோதி விபத்து.
K.S.மெஸ் அருகே டூவீலர் மீது கார் மோதியதில் முதியவர் படுகாயமடைந்தார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-06-27 12:14 GMT
கோப்பு படம்
கரூர், அண்ணா நகர் 2வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன் வயது 63. இவர் ஜூன் 26 ஆம் தேதி மாலை 7 மணி அளவில், கரூர் - கோவை சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். இவரது வாகனம் கே எஸ் மெஸ் அருகே சென்றபோது, அதே சாலையில் நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர், குப்பிச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் வயது 50 என்பவர் ஓட்டி வந்த கார், நாகராஜன் ஓட்டிச் சென்ற டூவீலரின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் வலது காலில் பலத்த காயமடைந்த நாகராஜனை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம், கரூரில் உள்ள நாதன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் தொடர்பாக நாகராஜன் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரண மேற்கொண்டனர்.