டூ வீலர் மோதிய விபத்தில் முதியவர் பலி
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே சைக்கிளில் சென்ற முதியவர் மீது இருசக்கர வாகனம் மோதியதில் முதியவர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Update: 2024-05-11 08:15 GMT
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அடுத்துள்ள அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் லோகநாதன் - 68 இவர் வேப்பந்தட்டை டாஸ்மாக் கடைக்கு செல்லும் வழியில் சில்லி கடை வைத்து நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இரவு கடையை மூடிவிட்டு சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டார் அப்போது பூலாம்பாடியை சேர்ந்த பிரதீப் -28 என்பவர் பெரம்பலூரில் இருந்து பூலாம்பாடி நோக்கி டூவீலரில் வந்த போது லோகநாதன் மீது எதிர்பாராத விதமாக மோதினார். இதில் லோகநாதன் மற்றும் பிரதீப் இருவரும் படுகாயம் அடைந்தனர். பின்னர் அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லோகநாதன் உயிரிழந்தார் இந்த சம்பவம் தொடர்பாக அரும்பாவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.