அகவை முதிர்ந்த தமிழ் அறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சியர்

டிசம்பர் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது

Update: 2023-12-15 02:28 GMT

அகவை முதிர்ந்த தமிழ் அறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் திங்கள்தோறும் உதவித்தொகையாக ரூ.3500/-, மருத்துவப்படி ரூ.500/- மற்றும் வாழ்நாள் முழுவதும் கட்டணமில்லாப் பேருந்துச் சலுகையும் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 2023-2024ஆம் ஆண்டிற்கு மாவட்டத்தில், அகவை முதிர்ந்த தமிழறிஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் 01.01.2023 அன்று 58 அகவை நிறைவடைந்தவர்களாகவும் அவர்களின் ஆண்டு வருமானம் ரூ.72000/-க்குள் இருத்தல் வேண்டும். மேலும், உதவித்தொகை பெற விரும்புவோர் அதற்கான விண்ணப்பப் படிவத்தினை தமிழ் வளர்ச்சித் துறையின் www.tamilvalarchithurai.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பெற்ற விண்ணப்பத்துடன், வட்டாட்சியர் அலுவலகத்தில் இணையவழியில் (ஆன்லைன் மூலம்) பெறப்பட்ட வருமானச்சான்று, ஆற்றிய தமிழ்ப்பணிகளுக்கான சான்றுகள், ஆற்றிவரும் தமிழ்ப்பணிகளுக்கான தகுதிநிலைச் சான்று (தமிழறிஞர் இருவரிடமிருந்து பெறப்பட வேண்டும்) ஆகியவற்றை இணைத்து, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், இரண்டாம் தளத்தில் செயற்பட்டுவரும் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு நேரிலோ, அஞ்சல் வாயிலாகவோ 2023ஆம் ஆண்டு திசம்பர் திங்கள் 31ஆம் நாளுக்குள் (31.12.2023) அனுப்பி வைத்தல் வேண்டும். மேலும், கூடுதல் விவரங்களுக்கு மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அவர்களை, அலுவலக வேலை நாள்களில் நேரிலோ அல்லது 04575-241487 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது 99522 80798 என்ற அலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு விபரங்கள் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News