மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை

எட்டயபுரம் அருகே, பராமரிக்க யாரும் இல்லாததால் வயது முதிர்ந்த மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2024-06-16 11:21 GMT

தற்கொலை

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகேயுள்ள கீழ இரால் கிராமத்தைச் சேர்ந்தவர் காசி மனைவி பார்வதி (70). இவரை பராமரிக்க யாரும் இல்லாததால் தனிமையில் வசித்து வந்துள்ளார். இதனால் மன வேதனையில் இருந்த அவர் நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து எட்டயபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News