கடன் தொல்லை மூதாட்டி தற்கொலை !
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே கடன் தொல்லை காரணமாக மூதாட்டி ஒருவா் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.;
By : King 24x7 Angel
Update: 2024-03-14 05:02 GMT
மூதாட்டி தற்கொலை
மூதாட்டி தற்கொலை
மணப்பாறையை அடுத்த கண்ணுடையான்பட்டி ஊராட்சி காட்டுப்பட்டியில் பொன்னுச்சாமி என்பவரது விளைநில கிணற்றில் மூதாட்டி ஒருவா் சடலமாக மிதப்பதாக செவ்வாய்க்கிழமை மணப்பாறை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீஸாா் கிணற்றிலிருந்து மூதாட்டியின் சடலத்தை மீட்டு உடறக்கூறாய்வுக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.மேலும், வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில் உயிரிழந்த மூதாட்டி பழைய காலனியைச் சோ்ந்த முத்துவைரவன் மனைவி சண்முகவள்ளி (72) என்பதும், கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.