மூதாட்டி தற்கொலை
பெரம்பலூர் அருகே உடல்நல குறைவால் முதாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
Update: 2024-06-14 17:00 GMT
தற்கொலை
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம் நக்கசேலத்தை சேர்ந்தவர் தர்மலிங்கம். இவரது மனைவி ஜெயக் கொடி -60 உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த இவர் நேற்று மதியம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு.வந்த பாடாலூர் போலீசார் ஜெயக்கொடியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.