பஸ் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி பலி

பஸ் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Update: 2024-06-24 02:25 GMT

பஸ் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி பலி

வேலூரை அடுத்த அத்தியூர் பாறைமேடு பகுதியை சேர்ந்தவர் ஜெயாம்மாள் (68). இவர் சம்பவத்தன்று வேலூர்-கலங்கமேடு செல்லும் அரசு பேருந்தில் சென்றார். அத்தியூர் பேருந்து நிறுத்தத்தில் பேருந்தில் இருந்து இறங்கியபோது படிக்கட்டில் இருந்து தவறி விழுந்தார். அதில் அவர் பேருந்து சக்கரத்தில் சிக்கியதாக தெரிகிறது. படுகாயமடைந் அவரை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.இதுகுறித்து அரியூர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News