செவிலியர் இல்லாததால் மூதாட்டி பலி !
செவிலியர் மற்றும் மருத்துவர் பணியில் இல்லாததால், உரிய சிகிச்சை பெறமுடியாமல் கலியம்மா உயிரிழந்தார்.;
By : King 24x7 Angel
Update: 2024-04-05 04:45 GMT
பலி
கள்ளக்குறிச்சி மாவட்டம், கூத்தக்குடி கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி மனைவி கலியம்மா,60; இவருக்கு நேற்று காலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடன் அவரது குடும்பத்தினர் கலியம்மாவை சிகிச்சைக்காக கூத்தக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு செவிலியர் மற்றும் மருத்துவர் பணியில் இல்லாததால், உரிய சிகிச்சை பெறமுடியாமல் கலியம்மா உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த கலியம்மாவின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கூத்தக்குடி புதுகாலனி பஸ்நிறுத்தம் அருகே நேற்று காலை 8 மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவலறிந்த கள்ளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதனையடுத்து காலை 8.30 மணியளவில் மறியல் விலக்கி கொள்ளப்பட்டது. சாலை மறியலால் கள்ளக்குறிச்சி - வேப்பூர் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது.