சரக்கு வேன் மோதி மூதாட்டி பலி
பழைய சிறுவங்கூரில் மினி சரக்கு வேன் மோதி மூதாட்டி இறந்தார்.;
Update: 2024-04-08 05:13 GMT
பேபி மனோரஞ்சிதம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் அடுத்த பழைய சிறுவங்கூரைச் சேர்ந்தவர் மூர்த்தி மனைவி பேபி மனோரஞ்சிதம், 62; ஓய்வுபெற்ற அங்கன்வாடி மைய பொறுப்பாளர். இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வெளியே சிமென்ட் சாலையில் துாங்கினார். அப்போது பழைய சிறுவங்கூரில் இருந்து பல்லகச்சேரிக்கு சென்ற மினி சரக்கு வேன் பேபி மனோரஞ்சிதம் மீது ஏறியது. இதில் படுகாயமடைந்த அவர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் இறந்தார். புகாரின் பேரில் பகண்டைகூட்ரோடு போலீசார் வழக்குப் பதிந்து, விபத்து ஏற்படுத்திய மினி சரக்கு வேன் டிரைவரைத் தேடி வருகின்றனர்.