யானை தாக்கி முதியவர் பலி
கடம்பூரில் யானை தாக்கியதில் முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.;
Update: 2024-03-07 09:12 GMT
கடம்பூரில் யானை தாக்கியதில் முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கடம்பூர் அருகேயுள்ள காடகநல்லி சின்ன உள்ளேபாளையம் பகுதியை சேர்ந்தவர் மாரப்பன் (64), ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். மாரப்பன் கிராமத்தை ஒட்டியுள்ள விவசாய தோட்டத்திற்கு பின்னால் உள்ள வனப்பகுதிக்குள் ஆடு மேய்த்துக் கொண்டிருக்கும் பொழுது புதருக்குள் மறைந்திருந்த யானை எதிர்பாராத விதமாக தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவம் குறித்து பொதுமக்கள் கடம்பூர் போலீசாருக்கும் வனத்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் பிரேதத்தை மீட்டு சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.