ஓமலூர் அருகே ஸ்ரீ சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா
ஓமலூர் அருகே வேலகவுண்டன்புதூரில் உள்ள ஸ்ரீ சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.;
Update: 2023-10-18 14:46 GMT
கும்பாபிஷேக விழா
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள வேலகவுண்டன்புதூர் பகுதியில் உள்ள ஸ்ரீ சக்தி விநாயகர் கோவில் மஹா கும்பாபிஷேக விழா கடந்த 13ஆம் தேதி வெள்ளிக்கிழமை முகூர்த்தகால் நடுதல் நிகழ்ச்சியுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. நேற்று பல்வேறு புண்ணிய ஸ்தலங்களில் இருந்து எடுத்து வரப்பட்ட தீர்த்த குட ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் இரவு 108 மூலிகைகளை கொண்டு சிறப்பு யாகம் நடைபெற்றது. இதை தொடர்ந்து இன்று காலை கோபுர கலசத்தின் மீது புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.