ஓமந்தூர் ஸ்ரீராம் சி.பி.எஸ்.இ. பள்ளி ஆண்டு விழா

ஓமந்தூர் ஸ்ரீராம் சி.பி.எஸ்.இ. பள்ளி ஆண்டு விழா. பெற்றோர்கள் பங்கேற்பு.

Update: 2024-05-03 06:22 GMT

பள்ளி ஆண்டுவிழா 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் -புதுச்சேரி சாலையில் ஓமந்தூரில் உள்ள ஸ்ரீராம் சி.பி.எஸ்.இ. பள்ளி ஆண்டுவிழா நடைபெற்றது. இதற்கு பள்ளி தாளாளர் முரளி என்ற ரகுராமன் தலைமை தாங்கி னார். விழாவில் நேபாளம் நாட்டைச் சேர்ந்த சரஸ்வதி வேத வித்ய அமைப்பை சேர்ந்த மகந்த்மான்கிரி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, பள்ளியில் நடந்த விளையாட்டு போட்டி மற்றும் தேர்வுகளில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் மத்திய அரசின் கல்வித் துறையின் கல்வி ஆலோசகர் ஸ்ரீகாந்த்கணேஷ், சென்னை இ.எல். ஏ.கிரீன் பள்ளி நிறுவனர் சம்ஹித்தா, தென்கோடிபாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ராஜசேகர், ஹரிகிருஷ்ணன் மற்றும் மாணவ -மாணவிகள் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News