கரூரில் ஆம்லெட் வர லேட்: ஓட்டல் உரிமையாளரை தாக்கிய போதை ஆசாமிகள்
காங்கேயம் அடுத்த தேசிய நெடுஞ்சாலையான திருச்சி கோயம்புத்தூர் செல்லும் சாலையில் சாலையோர உணவகத்தில் ஆம்லெட் வர காலதாமதம் ஆனதாக ஓட்டல் உரிமையாளரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அடுத்த முத்தூர் பிரிவில் அமைந்துள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வருபவர்கள் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த ஜோதிமுருகன் மற்றும் விஜய்.
இவர்கள் இருவரும் காங்கேயம் கரூர் சாலையில் இயங்கி வரும் சாலையோர ஹோட்டலில் மதியம் சாப்பிட சென்றுள்ளனர். அப்போது இருவரும் சாப்பிட்டு கொண்டிருக்கும் போது சைட்டிஷாக இரண்டு ஆம்லேட் கூறியுள்ளனர். இதனை அடுத்து அவர்கள் இருவரும் சாப்பிட வந்ததில் இருந்து கடைகளில் உணவு பரிமாறும் சப்ளையர்களிடம் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து ஆம்லேட் வரவில்லை என்று கடைக்காரரிடம் சண்டையிட்டு உள்ளனர். அப்போது வாக்குவாதம் முற்றி போக கடை உரிமையாளரை தாக்கியதாகவும் அதை தடுக்க வந்தவரை அடித்ததில் பற்கள் விழுந்ததாகவும் கூறப்படுகிறது. உடனே இதை கண்ட அருகில் இருந்த பொதுமக்கள் அந்த இரு போதை ஆசாமிகளையும் கையும் களவுயாக பிடித்து அடித்துத்துள்ளனர்.
இதனை அடுத்து பொதுமக்கள் விசாரித்ததில் இருவரும் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதும் இருவரும் போதையில் இருந்ததும், அருகிலுள்ள தனியார் மில்லில் லோடு மேனாகவும், சூப்பர்வைசராகவும் இருப்பதாக கூறினர். இதனை அடுத்து சந்தேகத்தின் பேரில் காங்கேயம் காவல் நிலையத்திற்கு புகார் அளித்தனர். பின்னர் இருவரையும் மீட்டு பத்திரமாக காவல் நிலையம் அழைத்து வந்தபோலிசார் இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.