ஆம்னி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து : ஒருவர் பலி, 8 பேர் காயம்

பாடாலூர் அருகே ஆம்னி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார், 8 பேர் காயங்களுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2024-06-28 02:23 GMT

விபத்துக்குள்ளான பேருந்து 

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளையில் இருந்து, சென்னை நோக்கி ஆம்னி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பேருந்தை வாவரை பகுதியை சேர்ந்த அமர்நாத் (36) என்பவர் ஓட்டி வந்துள்ளார் அப்போது. பேருந்து திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்ட எல்லையில் பாடாலூர் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு மேம்பாலம் கட்டுமான பணிகள் நடந்து வரும் நிலையில் . சாலையில் தோண்டப்பட்டு இருந்த பள்ளத்தில், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில் சம்பவ இடத்திலேயே பேருந்தில் வந்த கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு அருகே உள்ள மருதங்கோடு சேர்ந்த ரெத்தினன் மகன் அஜின்மோன் (25) பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் விபத்தில் காயம் அடைந்த 8 பேரை பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த பாடாலூர் போலீசார், விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News