பிப்ரவரி 29-ந் தேதி அன்று சேலம் அரசு ஆஸ்பத்திரியில் 20 குழந்தைகள் பிறந்தன

பிப்ரவரி 29-ந் தேதி பிறந்த குழந்தைகளுக்கு தமிழ் மாதத்தில் பிறந்த நாளை கொண்டாட பெற்றோர்கள் முடிவு.

Update: 2024-03-02 07:24 GMT

 சேலம் அரசு ஆஸ்பத்திரி

ஆங்கில மாதத்தில் பிப்ரவரியில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் 29 நாட்கள் வரும். இதனால் பிப்ரவரி மாதம் 29-ந் தேதி ஒரு அரிய நாளாக கருதப்படுகிறது. இது ஆங்கிலத்தில் லீப் ஆண்டு என்கிறோம். இந்த நாளில் பிறந்தவர்கள் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் பிறந்தநாள் கொண்டாட முடியும். முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் லீப் ஆண்டில் வரும் பிப்ரவரி 29-ந் தேதி பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பிப்ரவரி மாதம் 29-ந் தேதி நேற்று முன்தினம் அமைந்தது. அன்றைய தினம் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் 20 குழந்தைகள் பிறந்தன. இதில் தலா 10 ஆண், பெண் குழந்தைகள் பிறந்தன. இந்த குழந்தைகள் தங்களது பிறந்த நாளை வருகிற 2028-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 29-ந் தேதி தான் கொண்டாட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து பெற்றோர்கள் கூறும்போது, ஆங்கில காலண்டர் படி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை எங்களது குழந்தைகளின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவோம். அதே நேரத்தில் மற்ற ஆண்டுகளில் தமிழ் மாதத்தின் அடிப்படையில் எங்களது குழந்தைகளின் பிறந்த நாளை கொண்டாட திட்டமிட்டு உள்ளோம் என்றனர்.
Tags:    

Similar News