ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெள்ளாண்டி வலசு பகுதியில் கோலப்போட்டி
எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட 12 வது வார்டு பகுதியில் நகரக் கழகச் செயலாளர் முருகன் தலைமையில் கோலப்போட்டி நடைபெற்றது;
Update: 2024-02-25 14:48 GMT
வெள்ளாண்டி வலசு பகுதியில் கோலப்போட்டி
அதிமுகவின் பொதுச் செயலாளரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாள் விழா நாடு முழுவதும் உள்ள அதிமுகவினர் இடையே சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சிக்கு உட்பட்ட 30 வார்டுகளிலும் சிறுவர்கள் முதல் பெண்கள் வரை கோலப்போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அதை தொடர்ந்து வெள்ளாண்டி வலசு 12 வது வார்டு பகுதியில் எடப்பாடி நகரக் கழக செயலாளரும், நகர மன்ற உறுப்பினருமான முருகன் தலைமையில் கோலப்போட்டி நடத்தப்பட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கோலமிட்டு இதில் வெற்றி பெறும் முதல் ஐந்து இடங்களை பிடிக்கும் பெண்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து கோல போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த விழா ஏற்பாட்டினை வார்டு கழகச் செயலாளர் சரவணன் மற்றும் ரேவதி பிரியா செய்திருந்தார் அதனைத் தொடர்ந்து மொத்த முப்பது வார்டுகளில் ஒவ்வொரு வார்டுகளிலும் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் வெற்றியாளர்களுக்கு நாளை திங்கட்கிழமை மாலை நடைபெறும் அதிமுக பொதுக்கூட்டத்தில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் பரிசுகள் வழங்கப்பட உள்ளது.