100 கிலோ குட்கா - ஒருவர் கைது
பள்ளிபாளையத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 100 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டார் .;
By : King 24X7 News (B)
Update: 2024-05-30 13:41 GMT
100 கிலோ குட்கா
பள்ளிபாளையத்தில் மே-30 திருச்செங்கோடு ஏமப்பள்ளி அடுத்துள்ள அக்கமாபாளையம் சேர்ந்தவர் பழனிச்சாமி வயது 56. இவர் விட்டம்பாளையம் பள்ளி அருகிலும், பாப்பம்பாளையத்தில் உள்ள அவரது வீட்டிலும் சுமார் 100 கிலோ தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருப்பவதாக மொளசி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனை அடுத்து சப்- இன்ஸ்பெக்டர் சங்கீதா, ஏட்டுக்கள் நாகராஜன், மதிவாணன், நாகராஜன், ஆகியோர் சரக்கினை பறிமுதல் செய்து பழனிச்சாமியை கைது செய்தனர்..