குழந்தைகள் பாதுகாப்பு குறித்து ஒருநாள் பயிற்சி
சிவகங்கையில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து ஒருநாள் பயிற்சி நடைபெற்றது
சிவகங்கை மாவட்டம், சமூக பாதுகாப்புத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின் மூலம் குழந்தைகள் நல காவல் அலுவலர்களுக்கான ஒரு நாள் திறன் வளர்ப்பு பயிற்சி, மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில், மாவட்ட அமர்வு நீதிபதி சரத்ராஜ், குற்றவியல் நீதித்துறை நடுவர் சுந்தரராஜன்,
நீதித்துறை நடுவர் அனிதா கிருஸ்டி, ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இப்பயிற்சி கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில், குழந்தைகளுக்காக பேசுவதற்கு யாருமில்லை, அவர்களுக்காக குழந்தைகள் நல காவலர்கள் தான் பேச வேண்டும். அதற்காக இந்த பயிற்சி ஏற்படுத்தப் பட்டுள்ளது.
குழந்தைகள் பேசுவதற்காக காவல் நிலையங்களில் தனி அறை ஏற்படுத்தவும், அவர்களின் பாதுகாப்பு நலன் கருதி அனைத்து பணிகளையும் குழந்தைகள் நல காவல் அலுவலர்கள் சிறப்பாக கையாள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
மேலும், இப்பயிற்சி கூட்டத்தில் காவல் துறை செயல்பாடுகள் குறித்தும், குழந்தைகள் சம்மந்தமாக சட்டங்கள், இளைஞர் நீதிக்குழுமத்தை கையாளும் விதம் குறித்தும் எடுத்துரைத்தனர்.