பைக் விபத்தில் ஒருவர் பலி
தூத்துக்குடி அருகே பைக் விபத்தில் கூலித் தொழிலாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Update: 2024-06-22 06:48 GMT
தூத்துக்குடி அருகே உள்ள சில்லாநத்தம் கிராமம் மேல தெருவைச் சேர்ந்தவர் பரமசிவம் மகன் தென்கரை மகாராஜன் (56). கூலித் தொழிலாளி. இவர் தூத்துக்குடியில் இருந்து சில்லாநத்தம் கிராமத்திற்கு மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்தார். சாமிநத்தம் அருகே செல்லும்போது பைக் திடீரென்று நிலை தடுமாறி விபத்துக்குள்ளனாது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து புதியம்புத்தூர் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.