பெண்கள் மீது கார் மோதி விபத்து ஒருவர் பலி

விருதுநகரில் சாலை ஓரத்தில் அமர்ந்திருந்த பெண்கள் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகினர்.;

Update: 2023-11-05 14:33 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

விருதுநகர் அருகே செங்குன்றாபுரம் பகுதியில் விவசாய பணிக்காக முருகநேரியைச் சார்ந்த பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் வந்துள்ளனர் இவர்கள் பணியை முடித்துவிட்டு சாலை ஓரத்தில் இருந்த பாலத்தின் மீது அமர்ந்து இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது விருதுநகர் அருகே சூலக்கரை பகுதியில் வசித்து வரும் ராஜ்குமார் என்பவர் அழகாபுரியிலிருந்து காரை விருதுநகர் நோக்கி ஓட்டி வந்துள்ளார்

இவர் வந்த கார் செங்குன்றாபுரம் அருகே வந்து கொண்டிருந்த பொழுது கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தின் உள்ள பாலத்தின் மேலே அமர்ந்திருந்த பெண்கள் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.இந்த விபத்தில் முருகனேரியைச் சார்ந்த முத்துச்செல்வி வயது ( 45 ) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும் இந்த விபத்தில் முருகனேரியைச் சார்ந்த செல்வவதி (55) பேச்சியம்மாள் (54) பாண்டியம்மாள் (40) பாப்பா (50) ஆகிய நான்கு பெண்கள் காயமடைந்தனர் காவல்துறையினர் காயமடைந்த பெண்களை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காரை ஓட்டி வந்த ராஜ்குமாரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News