அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் பலி
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஆண் நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
Update: 2024-02-25 01:18 GMT
அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலி
தூத்துக்குடி மாவட்டம், காயாமொழி அருகே உள்ள குமாரசாமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நாராயணன் மகன் சுடலைமணி (56). இவர் காயாமொழி திருச்செந்தூர் ரோட்டில் நடந்து வந்தபோது, அவ்வவழியாக சென்ற ஒரு வாகனம் அவர் மீது மோதியதில் பலத்த காயமடைந்தார். இதையடுத்து அவரை திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து திருச்செந்தூர் தாலுகா காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.