டிராக்டர் கவிழ்ந்து விபத்து ஒருவர் உயிரிழப்பு
தர்மபுரி மாவட்டம், பொம்மடி பகுதியில் டிராக்டர் பள்ளத்தில் கவிழ்ந்து வீழ்ந்த விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.;
Update: 2024-02-11 12:35 GMT
டிராக்டர் கவிழுந்து பலி
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொம்மிடி பி.நடூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன் வெங்கடேசன். இவருக்கு வயது 38. கூலி தொழிலாளி. இவர் தனது நண்பரின் டிராக்டரை நேற்று ஓட்டிச்சென்றார். அப்போது, அஜ்ஜம்பட்டி என்றபகுதியில் சென்றபோது அந்த பகுதியில் உள்ள பள்ளத்தில் எதிர்பாராத நேரத்தில் டிராக்டர் இறங்கி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த வெங்கடேசனை அங்கிருந்தவர்கள் மீட்டு சேலம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து பொம்மிடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.