ஆவணமின்றி எடுத்து சென்ற ஒரு லட்ச ரூபாய் பறிமுதல்
சங்கராபுரம் அருகே நடந்த சோதனையில் ஆவணமின்றி எடுத்து சென்ற ஒரு லட்ச ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
Update: 2024-03-24 05:55 GMT
சங்கராபுரம் அடுத்த எஸ்.குளத்துர் கூட்ரோடில் பறக்கும்படை அதிகாரி மாதவன் தலைமையில் எஸ்.எஸ்.ஐ., அமானுல்லா தலைமையிலான குழுவினர் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த நபர் உளுந்துர்பேட்டை அடுத்த காட்டு எடையார் கிராமத்தை சேர்ந்தஆறுமுகம் மகன் குணசேகரன். 24; என்பவரை மடக்கி சோதனை செய்ததில் அவரிடம் உரிய ஆவணம் இன்றி ரு.1 லட்சம் இருப்பது தெரியவந்தது. அதிகாரிகள் மேற்படி தொகையை பறிமுதல் செய்து சங்கராபுரம் தாசில்தார் கோபாலகிருஷ்ணன் வசம் ஒப்படைத்தனர்.