காங்கேயத்தில் கடத்தல் சம்பவத்தில் மேலும் ஒருவர் கைது

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் கடந்த வருடம் நடைபெற்ற கடத்தல் சம்பவத்தில் ஏழு பேர் கைது செய்த நிலையில் மேலும் ஒருவரை காங்கேயம் காவல்துறை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-03-09 10:42 GMT

கைது 

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகாவை அடுத்த மல்லசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த கலா மற்றும் அவரது நண்பர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் டிரைவர் கார்த்திக் ஆகியோரை கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 23ஆம் தேதி ஒரு கும்பல் கடத்தி அவர்களிடம் இருந்த ரூபாய் 5 லட்சம் 8பவுன் சங்கிலி ஆகியவற்றை வழிப்பறி செய்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை காங்கேயம் காவல்துறையினர் தேடி வந்த நிலையில் கடந்த மாதம் நாமக்கல் மாவட்டம் வேலூரை சேர்ந்த சுதா, காங்கேயம் பகுதி படியூரை சேர்ந்த இந்திராணி, திருப்பூர் சேர்ந்த கார்த்திகேயன், சந்தோஷ், பாண்டித்துரை, செந்தில்குமார் மற்றும் முத்தூரை சேர்ந்த செந்தில்குமார் ஆகியோரை கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். இதில் பலர் தலைமுறைவாக உள்ளதாகவும் அவர்களின் முக்கிய நபர்கள் இருக்கலாம் எனவும் சந்தேகித்து நடத்தப்பட்ட தீவிர தேடுதல் வேட்டையில் தாராபுரம் ரைஸ் மில் தோட்டத்தைச் சேர்ந்த கடத்தலின் முக்கியத்து புள்ளியான ஜெகதீஷ் வயது 39 என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். ரூபாய் 5 லட்சம் பணம் கொள்ளையில் இதுவரை 8பேரை கைது செய்துள்ள காவல் துறையினர் பலர் தலைமுறைகளாக உள்ளதாக தேர்தல் வேட்டையை தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News