இருசக்கர வாகன விபத்தில் ஒருவர் பலி!
திருச்சி மாவட்டம் இருசக்கர வாகன விபத்தில் ஒருவர் பலி.;
Update: 2024-03-19 05:56 GMT
வசந்தகுமார்
திருச்சி மாவட்டம் மணப்பாறை சமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் வசந்தகுமார் (37). இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வரும் நிலையில், இன்று காலை குழு வசூலுக்காக மோட்டார் சைக்கிளில் மணப்பாறையிலிருந்து அன்னவாசல் வழியாக சொக்கநாதன்பட்டி அருகே சென்றுள்ளார். அப்போது, புதுக்கோட்டையிலிருந்து இலுப்பூர் நோக்கிவந்த 108 ஆம்புலன்ஸ் வசந்தகுமார் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது. அதில், படுகாயமடைந்த வசந்தகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இந்நிலையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.