இருசக்கர வாகனம் மீது டெம்போ மோதல் – ஒருவர் பலி
கன்னியாகுமரி மாவட்டம், தோமையார்புரம் பகுதியில் இருசக்கர வாகனம் மீது டெம்போ மோதிய விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி அருகே உள்ள அழகிய பாண்டிபுரம் பகுதியை சேர்ந்தவர் கணேசன் (46). இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். கணேசன் தடிக்காரன் கோணம் பகுதியில் உள்ள ஒரு ஒர்க் ஷாப்பில் பெயிண்டர் ஆக வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை வழக்கம் போல் தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது தோமையார்புரம் பகுதியில் செல்லும் போது, திடீரென அவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது.
உடனே மோட்டார் சைக்கிளை சாலையின் ஓரத்தில் நிறுத்திவிட்டு, பைக்கில் இருந்தபடி செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது எதிரே தடிக்காரன் கோணம் பகுதியை சேர்ந்த எபி ஆன்றோ (23) என்பவர் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்துள்ளார். அவர் முன்னால் சென்ற டெம்போவை முந்த முயன்ற போது சாரையோரத்தில் செல்போனில் பேசிக்கொண்டிருந்த கணேசன் மோட்டார் சைக்கிள் மீது மோதினார். இதில் தூக்கி வீசப்பட்ட கணேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். எபி ஆன்றோ படுகாயம் அடைந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக பூதப்பாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து, எபி ஆன்றோவை ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிட்சைக்கும், கணேசன் உடலை கைப்பற்றி அதே மருத்துவ கல்லூரிக்கு பிரேத பரிசோதனைக்கும் அனுப்பினர். மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.