கண்டமங்கலம் அருகே நின்ற லாரி மீது கார் மோதி ஒருவர் பலி

கண்டமங்கலம் அருகே நின்ற லாரி மீது கார் மோதி ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-06-27 17:34 GMT

விபத்து 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை கந்தசாமிபுரம் பகுதியை சேர்ந்தவர் அப்துல் ரகு மான் (வயது 32). ஜவுளிக்கடை உரிமையாளர். இவர், அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர் கள் திருநாவுக்கரசு (32), சாய் (32), பிரேம்குமார் (32) ஆகியோருடன் காரில் புதுவைக்கு சுற்றுலா வந்தார். புதுவையில் பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்து விட்டு நேற்று அதிகாலை மீண்டும் அவர்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டனர். காரை திருநாவுக்கரசு ஓட்டினார். புதுச்சேரி - விழுப்புரம் நெடுஞ்சாலையில் கண்ட மங்கலம் அருகே சென்றபோது, புதுவையில் தங் களது உடமையை வைத்துவிட்டு வந்தது.

அவர்களுக்கு தெரியவந்தது. இதையடுத்து அதை எடுப்பதற்காக மீண்டும் புதுச்சேரிக்கு திரும்பினர். புதுச்சேரி - விழுப்புரம் 4 வழிச்சாலையில் கண்ட மங்கலம் பகுதியில் தற்போது ரெயில்வே மேம் பால பணி நடைபெறுவதால் வாகனங்கள் மாற்று வழியில் இயக்கப்படுகின்றன.

அதன்படி கண்ட மங்கலம் போலீஸ் நிலையம் எதிரே உள்ள சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. இதுபற்றிய வழிகாட்டு பலகை அங்கு வைக்கப்ப டாத நிலையில் அந்த பகுதியில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் பின்பக்கம் அப்துல் ரகுமான் சென்ற கார் எதிர்பாராதவித மாக மோதியது.

இதில் காரின் முன்பகுதி நொறுங்கி சேதமடைந்தது. இதில் படுகாயம் அடைந்த அப்துல் ரகுமான் சம்பவ இடத்திலேயே பலியானார். திருநாவுக்கரசு, சாய், பிரேம்குமார் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

விபத்து பற்றி தகவல் அறிந்த கண்டமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, காயமடைந்தவர்களை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News