லாரி மோதிய விபத்தில் ஒருவர் பலி
செங்கோட்டையில் லாரி மோதிய விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.;
Update: 2024-03-06 07:40 GMT
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே கொடிக்குறிச்சி பகுதியில் உள்ள திருமங்கலம் -கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் லாரியும், எதிரே வந்த இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் செங்கோட்டை மேலூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர், இதுகுறித்து இலத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.